/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரை மேலாண்மை திட்ட வரைவு திரும்ப பெற மாஜி எம்.பி., கோரிக்கை
/
கடற்கரை மேலாண்மை திட்ட வரைவு திரும்ப பெற மாஜி எம்.பி., கோரிக்கை
கடற்கரை மேலாண்மை திட்ட வரைவு திரும்ப பெற மாஜி எம்.பி., கோரிக்கை
கடற்கரை மேலாண்மை திட்ட வரைவு திரும்ப பெற மாஜி எம்.பி., கோரிக்கை
ADDED : மே 18, 2024 06:24 AM
புதுச்சேரி: கடற்கரை மேலாண்மை திட்ட வரைவினை முதல்வர் திரும்ப பெற வேண்டும் என, முன்னாள் எம்.பி., ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி கடற்கரை மேலாண்மைத் திட்ட வரைவின் மீது 22ம் தேதி நடக்க உள்ள கலந்துரையாடல் கூட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டும் என்ற மீனவ மக்களின் கோரிக்கை நியாயமானது.
கடற்கரை அரிப்பு இன்று ஒவ்வொரு கிராமத்தையும் பாதித்து வருகிறது. இது மேலும் வலுவடைந்து கிராமங்களில் வீடுகள் பாதிக்கும் நிலை ஏற்படும். சுற்றுச்சூழல் பாதிப்பு உருவாக வாய்ப்பு உள்ளது. அவற்றைத் தடுத்து கடற்கரை வளங்களைக் காப்பாற்றத் தேவையான யுக்திகள் மேலாண்மைத் திட்டத்தில் இருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல், மீனவர் நலன், மீனவர்களின் எதிர்காலம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக கடற்கரை மேலாண்மைத் திட்டம் அமைய வேண்டும். தற்போதைய வரைவுத் திட்டம் அப்படி இல்லை. எனவே முதல்வர் இந்த வரைவுத் திட்டத்தை திரும்ப பெற்று, மக்களோடு கலந்து மீண்டும் சரி செய்ய சம்பந்தப்பட்டத் துறைக்கு உத்தரவிட வேண்டும்.
சரி செய்யப்பட்ட வரைவை முதல்வர் சம்பந்தப்பட்ட அமைச்சரும் கடற்கரை தொகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ,களை கலந்து ஆலோசித்து அந்த வரைவை மீண்டும் மக்கள் ஆலோசனைக்கு முன் வைக்க வேண்டும். அதன்பிறகு அரசு ஆணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

