/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., ஆட்சியில் ஊழல்களை விசாரிக்க கவர்னருக்கு மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
/
காங்., ஆட்சியில் ஊழல்களை விசாரிக்க கவர்னருக்கு மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
காங்., ஆட்சியில் ஊழல்களை விசாரிக்க கவர்னருக்கு மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
காங்., ஆட்சியில் ஊழல்களை விசாரிக்க கவர்னருக்கு மாஜி எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : செப் 11, 2024 11:24 PM
புதுச்சேரி : காங்., ஆட்சியில் நடந்த பல்வேறு ஊழல்களை விசாரிக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் கவர்னருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அவரது அறிக்கை:
பல அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் வாடகை கார்களை பயன்படுத்தி ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்கின்றனர்.
கவர்னர் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல எம்.எல்.ஏ.,க்கள் இரண்டுக்கும் மேற்பட்ட அரசு கார்களை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். மத்திய தணிக்கை குழு பல ஆண்டுகளாக தொடர்ந்து அரசு நிதி நிலையில் பல்வேறு முறைகேடுகளை சுற்றி காட்டி உள்ளது. அதை ஆட்சியாளர்கள், அதிகாரிகள் சரி செய்யவில்லை.
நிதி இல்லை என, காரணம் காட்டும் அரசு நிதி சிக்கனத்தை கையாள தவறிவிட்டது.
கடந்த காங்., ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்து, அவை தற்போது விசாரணையில் உள்ளன.
அதை துரிதப்படுத்தி சம்பந்தப்பட்ட ஊழல்வாதிகளை மக்கள் முன் அடையாளம் காட்ட வேண்டும்.
மின் கட்டண உயர்வு விஷயத்தில் புதுச்சேரி தி.மு.க., இரட்டை வேடம் போடுகிறது. புதுச்சேரியில் மின் கட்டணம் உயர்வுக்கு பந்த் அறிவிக்கும் தி.மு.க., தமிழகத்தில் தொடர்ந்து மின் கட்டணம் உயர்ந்துவரும் போது, இங்கு உள்ள தி.மு.க., ஏன் எதிர்க்கவில்லை.
இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.

