/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் கருத்து பட்டறை
/
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் கருத்து பட்டறை
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் கருத்து பட்டறை
வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் கருத்து பட்டறை
ADDED : ஏப் 16, 2024 07:06 AM

விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் இயந்திரவியல் துறை சார்பில் கருத்துப்பட்டறை நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். முதல்வர் அன்பழகன், துறைத் தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தனர்.
மாணவர் அபினேஷ் வரவேற்றார். டைனாடெக், நிர்வாக இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொறியியல் கல்லுாரி மாணவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.
பண்ருட்டி, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லுாரி, இயந்திரவியல் துறை பேராசிரியர் செந்தில்குமார் நடுவராக இருந்து சிறந்த 3 ஆய்வுக் கட்டுரைகளை தேர்வு செய்தார்.
சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கும், பல்வேறு தொழில்நுட்ப நிகழ்வுகளில் வென்றவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

