தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பிளஸ் 2 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

பிளஸ் 2 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை

பிளஸ் 2 தேர்வில் தோல்வி மாணவர் தற்கொலை


ADDED : மே 07, 2024 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2024 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர் : கிருமாம்பாக்கம் அருகே, பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த அரசு பள்ளி மாணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..

நாகப்பட்டினம் மாவட்டம் மேலவாஞ்சூர் அமிர்தா நகரை சேர்ந்தவர் குட்டியாண்டி - மதி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆதேஷ் 17; அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

ஆதேஷ் விடுமுறைக்காக கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பனித்திட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த அவரது உறவினரான பூமொழி என்பவர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.

இந்நிலையில், நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில், ஆதேஷ் அதில் தோல்வி அடைந்தார்.

இதனால், மனமுடைந்த அவர் வீட்டில் அறையில் இருந்த ஜன்னல் கம்பியில் துண்டால் துாக்கு போட்டு கொண்டார்.

உடன் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us