/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒவ்வொரு ஓட்டும், மோடிக்கு வேட்டாக மாற வேண்டும்: உதயநிதி கடலுாரில் அமைச்சர் உதயநிதி பேச்சு
/
ஒவ்வொரு ஓட்டும், மோடிக்கு வேட்டாக மாற வேண்டும்: உதயநிதி கடலுாரில் அமைச்சர் உதயநிதி பேச்சு
ஒவ்வொரு ஓட்டும், மோடிக்கு வேட்டாக மாற வேண்டும்: உதயநிதி கடலுாரில் அமைச்சர் உதயநிதி பேச்சு
ஒவ்வொரு ஓட்டும், மோடிக்கு வேட்டாக மாற வேண்டும்: உதயநிதி கடலுாரில் அமைச்சர் உதயநிதி பேச்சு
ADDED : ஏப் 01, 2024 04:17 AM
கடலுார் : ''பிரதமர் மோடி ஜூன் 4ம் தேதிக்கு பிறகு செல்லாக்காசு ஆகிவிடுவார்'' என அமைச்சர் உதயநிதி பேசினார்.
கடலுார் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து அவர் பேசியதாவது:
'இண்டியா' கூட்டணி சார்பில் கடலுார் தொகுதியில் விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். வரும் 19ம் தேதி நீங்கள் கை சின்னத்திற்கு போடும் ஒவ்வொரு ஓட்டும், மோடிக்கு வைக்கிற வேட்டாக மாற வேண்டும்.
கடந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை ஓட ஓட விரட்டி அடித்தீர்கள். அப்போது 'கோ பேக் மோடி' என்றோம். இந்த முறை 'கெட் அவுட் மோடி' என்று சொல்வோம்.
கடந்த முறை நம் எதிரிகள் அனைவரும் ஒரே அணியில் ஒன்றாக சேர்ந்து வந்தார்கள். இந்த முறை ஒவ்வொருவரும் அணி அணியாக பிரிந்து வந்திருக்கிறார்கள். 'எல்லோருக்கும் எல்லாம்' என்பது தான் திராவிட மாடல் அரசு.
10 ஆண்டுகளுக்கு முன் 450 ரூபாய் இருந்த சிலிண்டர் விலை தற்போது 800 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். தற்போது தேர்தலுக்காக 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
'இண்டியா' கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். ஒரு லிட்டர் பெட்ரோல் 75, டீசல் 65 ரூபாய்க்கு கொடுக்கப்படும்.
ஜி.எஸ்.டி.,யில் 1 ரூபாய் கட்டினால், 29 பைசா தான் திருப்பி கொடுக்கிறார். அதனால் மோடிக்கு மிஸ்டர் 29 பைசா என பெயர் வைத்துள்ளேன். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு அவர் செல்லா காசுதான்.
பழனிசாமிக்கு ஒரு செல்ல பெயர் வைக்கப்பட்டுள்ளது. அது பாதம் தாங்கி பழனிசாமி. அவர் சசிகலாவின் காலைப் பிடித்து முதல்வராகிவிட்டு அவரது காலையே வாரி விட்டவர்.
நான் பேசியதையே பேசுவதாக பழனிசாமி கூறுகிறார். பழனிசாமி ஆளுக்கு தகுந்தாற்போல் மாற்றி மாற்றி பேசுகிறார். அவரை போல் பேச நான் பச்சோந்தி அல்ல. சமூக நீதியை மட்டும் தான் பேசுவேன்.
திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன் ட்ரெய்லர் வெளியிடப்படும். நான் வெறும் ட்ரெய்லர் தான். மெயின் பிக்சர் முதல்வர் ஸ்டாலின்.
இவ்வாறு உதயநிதி பேசினார்.

