/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வைத்திலிங்கம் ஜெயித்தாலும் 'வேஸ்ட்' பேசாம தாமரைக்கே ஓட்டு போட்டுங்க வைத்திலிங்கம் ஜெயித்தாலும் 'வேஸ்ட்' தாமரைக்கே ஓட்டு போடுங்க: ரங்கசாமி முதல்வர் ரங்கசாமி நக்கல் பேச்சு

ADDED : ஏப் 02, 2024 04:25 AM

புதுச்சேரி : மீண்டும் மோடி ஆட்சிதான் எனவே காங்.,வேட்பாளர் வெற்றி பெற்று போனாலும்ஒன்னும் பன்னமுடியாது.எனவே தாமரைக்கே ஓட்டு போடுங்கள் எனமுதல்வர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்தினை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி நேற்று உப்பளம் தொகுதியில் ஓட்டு சேகரித்தார்.
பிரசாரத்தில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
கடந்த முறை லோக்சபாவிற்கு காங்., எம்.பி.,வைத்திலிங்கம் சென்றார்.அவரால் லோக்சபாவில் பேச முடிந்ததா. அங்கு பேசி புதுச்சேரிக்கு ஏதாவது சாதித்து கொண்டு வந்தாரா.அவரால் ஒன்றும்முடியவில்லை.தேசிய ஜனநாயக கூட்டணி தான் மீண்டும் மத்தியில்ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் சொல்லுகின்றன. காங்.,வேட்பாளர் வெற்றி பெற்று அங்கு போனால் என்ன பன்னுவார்..ஒன்னும் கேட்க முடியாது.எனவே யார் வெற்றிப் பெற்றால் மாநிலத்திற்கு நல்லது என்று சிந்தித்து பார்த்து மக்கள் ஓட்டளிக்க வேண்டும்.நமச்சிவாயம் டில்லி சென்றால் தான் புதுச்சேரி மாநிலத்திற்கு நல்லது.
யாரும் குறை சொல்ல முடியாதபடி நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.அதற்கு பெரிய உதவியாக இருப்பதுமத்திய அரசு தான்.கடந்த காங்., ஆட்சியில் மக்களுக்கு ஒன்றும் செய்யமுடியவில்லை. நாங்கள் 2 ஆயிரம் பேருக்கு நிரந்தர அரசு வேலைவாய்ப்பினை கொடுத்துள்ளோம்.இன்னும் கொடுக்க போகிறோம்.கடந்த ஆட்சியில் மத்திய அரசுடன் கருத்து வேற்றுமையால் கவர்னரோடு சண்டை மட்டும் தான் போட்டனர்.திட்டங்களை ஏதும் கொண்டு வந்து செயல்படுத்தவில்லை.
நமச்சிவாயம் வெற்றிப் பெற்றால் மத்திய அரசு நமக்கு பெரிய அங்கீகாரம் கொடுக்கும்.மத்திய அமைச்சர் ஆவார்.இது மாநிலத்திற்கு உறுதுணையாகவும் இருக்கும்.அவரைதாமரை சின்னத்தில் ஓட்டளித்து அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப் பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.