/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜூன் 30க்குள் தேர்தல் செலவை தாக்கல் செய்ய வேண்டும் அனைத்து வேட்பாளர்களுக்கு தேர்தல் துறை அறிவுறுத்தல்

ADDED : ஏப் 25, 2024 11:50 PM
புதுச்சேரி: அனைத்து வேட்பாளர்களும் ஜூன் 30ம் தேதிக்குள் தங்களுடைய தேர்தல் செலவின கணக்குகளை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 75 லட்சம் ரூபாய் வரை வேட்பாளர்கள் செலவு செய்யலாம். அரசியல் கட்சிகள் செலவு செய்ய உச்சவரம்பு எல்லை இல்லை.
அதே நேரத்தில் இருவருமே கணக்கு வைக்க வேண்டும்.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேச்சை வேட்பாளர்கள் என 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அரசியல் கட்சி வேட்பாளர்கள் தொண்டர்களுக்கும், பிரசாரத்திற்கும் லட்சணக்கில் செலவு செய்தனர். சுயேச்சை வேட்பாளர்கள் அதிக செலவு செய்யவில்லை.
வேட்பாளர்களின் அனைத்து செலவினங்களை, தேர்தல் செலவின பிரிவு கண்காணித்து பதிவு செய்துள்ளது.
இதில் கடந்த 14ம் தேதி வரை அனைத்து வேட்பாளர்கள் தங்களுடைய செலவின தொகை தாக்கல் செய்துள்ளனர். 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை செலவின தொகை இன்னும் தாக்கல் செய்யவில்லை.
ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. எனவே அன்று முகவர்களுக்கு வேட்பாளர்கள் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
எனவே அன்றைய தினம் வரை வேட்பாளர்கள் வேறு ஏதேனும் செலவு செய்தாலும், வேட்பாளர் கணக்கில் சேர்க்கப்பட உள்ளது.
ஓட்டு எண்ணிக்கையில் இருந்து 26 நாட்கள் கழித்து முழு தேர்தல் செலவின கணக்கையும் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
எனவே ஜூன் 30ம் தேதிக்குள் அனைத்து வேட்பாளர்களும் தங்களது தேர்தல் செலவின கணக்குகளை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும் என, தேர்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன் பிறகு வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்கு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மாநில தேர்தல் துறை வாயிலாக அனுப்பி வைக்கப்பட உள்ளது.