தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேர்தல் புறக்கணிப்பு மீனவர்கள் எச்சரிக்கை

தேர்தல் புறக்கணிப்பு மீனவர்கள் எச்சரிக்கை

தேர்தல் புறக்கணிப்பு மீனவர்கள் எச்சரிக்கை


ADDED : ஏப் 05, 2024 05:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2024 05:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை விடுவிக்கவில்லை எனில் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் 11 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். எல்லைத்தாண்டி மீன்பிடிப்பதாக காரைக்கால் மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர் கதையாக உள்ளது.

காரைக்காலை சேர்ந்த இரண்டு விசைப்படகுகளில் இருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். படகு ஒட்டுநர்களுக்கு இலங்கை கோர்ட்டில் ஆறுமாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதை கண்டித்து லோக்சபா தேர்தல் புறக்கணிப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்படுவதாக காரைக்கால் மீனவ பஞ்சாயத்தார்கள் அறிவித்துள்ளனர்.

இதனால் 300க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர் போராட்டத்தில் தேர்தல் புறக்கணிப்பு, படகில் கருப்பு கொடி ஏற்றுவது என, மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us