/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழகத்தில் தொடர் மழையால் காய்கறிகளின் விலை உயர்வு
/
தமிழகத்தில் தொடர் மழையால் காய்கறிகளின் விலை உயர்வு
தமிழகத்தில் தொடர் மழையால் காய்கறிகளின் விலை உயர்வு
தமிழகத்தில் தொடர் மழையால் காய்கறிகளின் விலை உயர்வு
ADDED : மே 22, 2024 07:02 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் கடும் வெயில், தொடர் மழையால் காய்கறிகளின் விலை அதிகாரித்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக புதுச்சேரியில் மழை விட்டு, விட்டு கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை காரணமாக புதுச்சேரியில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
அதில், புதுச்சேரி பெரிய காய்கறி மார்கெட்டில் நேற்று நிலவரப்படி, வெங்காயம் ஒரு கிலோ ரூ.30, சாம்பார் வெங்காயம் ரூ.65, தக்காளி ரூ. 30, ஜாம் தக்காளி ரூ. 50, கேரட் ரூ.60, பீட்ரூட் ரூ. 35, சவுசவ் ரூ. 60, முள்ளங்கி ரூ. 20, பீன்ஸ் ரூ. 150, அவரக்காய் ரூ.140, பச்சை மிளகாய் ரூ. 80, கொட மிளகாய் ரூ. 60, முருங்ககாய் ரூ. 50, உருளை கிழங்கு ரூ. 35, நாட்டு கத்தரிக்காய் ரூ. 55, மாங்காய் ரூ. 35; பட்டாணி ரூ. 150, இஞ்சி ரூ. 160, சோளம் ஒரு கிலோ ரூ. 40க்கு விற்கப்பட்டது.
இதுபற்றி காய்கறி கடை வியாபாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் கடுமையான வெயில், தொடர்ந்து மழை பெய்து வருவதால், காய்கறிகளின் வரத்து குறைவாக உள்ளது. அதனால், புதுச்சேரியியில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

