/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்தவர்களின் பெயர்களை நீக்க அலைக்கழிப்பதா: அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்
/
இறந்தவர்களின் பெயர்களை நீக்க அலைக்கழிப்பதா: அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்
இறந்தவர்களின் பெயர்களை நீக்க அலைக்கழிப்பதா: அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்
இறந்தவர்களின் பெயர்களை நீக்க அலைக்கழிப்பதா: அ.தி.மு.க., அன்பழகன் கண்டனம்
ADDED : செப் 10, 2024 06:44 AM
புதுச்சேரி : இறந்தவர்களின் பெயர்களை நீக்க பொதுமக்களை அலைக்கழிப்பதா என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இறந்தவர்களின் பெயர் நீக்கம் சம்பந்தமான ஒரு அறிவிப்பை குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குநர் வெளியிட்டுள்ளார். அலுவலகத்திற்கு வந்து இறந்தவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அடக்கம் செய்யவோ, எரியூட்டவோ புதுச்சேரியில் உள்ள நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகள் அல்லது அந்தந்த காவல் நிலைய அதிகாரிகளே உரிய சான்றிதழ் வழங்குவர். இறப்பு சான்றிதழ்கள் கொம்யூன் பஞ்சாயத்துகள் மற்றும் நகராட்சிகளில் பெற்றுக்கொள்வர்.
நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளால் வழங்கப்படக்கூடிய சான்றிதழை குடிமைப்பொருள் வழங்கல் துறை, தேர்தல் துறை, புள்ளி விவரத்துறை உள்ளிட்ட துறைகள் நேரிடையாக சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் இருந்து பெற்று இறந்தவர்களின் பெயர்களை நீக்கம் செய்யலாம்.
இறந்தவர்களின் பெயர் நீக்கம் செய்வதில் அரசே தனக்குள்ள சான்றிதழ்களின் அடிப்படையில் செய்யலாம்.
இதை விடுத்து இறந்தவர்களின் பெயரை எடுத்துக்கூற குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்திற்கு பொதுமக்களை வரவழைப்பது மக்களுக்கு வீண் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இந்த அறிவிப்பை துறையின் அமைச்சர் திரும்ப பெற அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

