/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., பவள விழாவையொட்டி வீடுதோறும் கொடி ஏற்ற அழைப்பு
/
தி.மு.க., பவள விழாவையொட்டி வீடுதோறும் கொடி ஏற்ற அழைப்பு
தி.மு.க., பவள விழாவையொட்டி வீடுதோறும் கொடி ஏற்ற அழைப்பு
தி.மு.க., பவள விழாவையொட்டி வீடுதோறும் கொடி ஏற்ற அழைப்பு
ADDED : செப் 13, 2024 06:46 AM
புதுச்சேரி: தி.மு.க.,வின் பவள விழாவையொட்டி வீடுகள் தோறும் கொடியேற்ற வேண்டும் என தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
தி.மு.க., தலைவர், தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்சியின் பவள விழாவை சிறப்பாக கொண்டாட உத்தரவிட்டுள்ளார். பவளவிழாவையொட்டி கொடிக் கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கட்சிக்காக உழைத்த மூத்த முன்னோடிகளை கொண்டு கொடியை ஏற்ற வேண்டும் என தமிழக முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, வீதிகள்தோறும் பறக்கும் தி.மு.க., கொடியை வீடுகள் தோறும் பறந்திட செய்ய வேண்டும். கட்சிக்கொடி பறக்காத வீடுகளே இல்லை எனும் வகையில் பவள விழாவை, இல்லங்கள், அலுவலகங்களில் கொடி ஏற்றி கொண்டாட வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.