/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'அரசியல்வாதிகளுடன் போலீசார் தொடர்பில் இருக்கக் கூடாது' டி.ஐ.ஜி., பிரிஜேந்திர குமார் எச்சரிக்கை

ADDED : ஏப் 03, 2024 07:20 AM

புதுச்சேரி : லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கான ஆலோசனைக் கூட்டம் கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.
கூட்டத்தில் போலீஸ் ஐ.ஜி.,அஜித்குமார் சிங்லா, டி.ஐ.ஜி., பிரிஜேந்திரகுமார், போலீஸ் தேர்தல் பார்வையாளர் அமன்தீப் சிங், சீனியர் எஸ்.பி.,க்கள் நாரா சைதன்யா, அனிதா ராய், கலைவாணன், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டி.ஐ.ஜி பிரிஜேந்திர குமார் பேசுகையில், 'புதுச்சேரியில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், போலீசார் விதிமுறைகளை சரியாக கடைபிடிக்க வேண்டும்.
எந்தவித அரசியல்வாதிகளுடனும், தொடர்பில் இருக்கக் கூடாது. போலீசார் சிலர் தங்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளுடன் இருக்கும் போட்டோக்கள் உள்ளது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.
அதேபோல்,சோதனை சாவடிகளில் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் சிலர் பணியின்போது, உறங்குவதாக புகார்கள் வருகின்றன.
விசாரணையில் உண்மை என தெரியவந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.