தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு நடிகைகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு நடிகைகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு

கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு நடிகைகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு


ADDED : பிப் 28, 2025 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2025 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி,: கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி, லாஸ்பேட்டையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன்,70; இவர், கிரிப்டோ கரன்சியில் ஆஷ்பே என்ற இணையதள பக்கத்தில் ரூ. 98 லட்சம் முதலீடு செய்து, ஏமாந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, கிரிப்டோ கரன்சி மோசடி கும்பலை சேர்ந்த கோயம்புத்துார் ரமேஷ்குமார் மகன் நித்தீஷ்குமார் ஜெயின் 36; அரவிந்த்குமார், 40; ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், 9 பேரை தேடி வருகின்றனர்.

இவ்வழக்கில், பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோர் சம்மந்தப்பட்டுள்ளதால், அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் தொடர்புடையவர்கள் கோயம்புத்துார், மாமல்லபுரம், மும்பை உள்ளிட்ட இடங்களில் மோசடி செய்த பணத்தை கொண்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து, மிக பெரிய அளவில் விழாக்களை நடத்தியுள்ளனர். இதில், சினிமா நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட சில பிரபலங்களை அழைத்து வந்துள்ளது தெரியவந்தது.

இதற்காக நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டது. அந்த பணம் எந்த வங்கிக் கணக்கில் இருந்து அனுப்பப் பட்டது. அவர்களுக்கும் இந்த மோசடி கும்பலுடன் தொடர்பு உள்ளதா என பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால், சம்மந்தப்பட்ட நடிகைகளான தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us