தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்க முடிவு

உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்க முடிவு

உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்க முடிவு


ADDED : ஜூன் 03, 2024 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 03, 2024 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதும், உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி அமைச்சக பதவிகளில் அசிஸ்டண்ட் எனப்படும் 1,135 உதவியாளர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 20 சதவீதம் நேரடி நியமனம் மூலமும், 20 சதவீதம் துறை ரீதியாக தேர்வு நடத்தியும், 60 சதவீதம் பதவி உயர்வு மூலமும் நிரப்ப வேண்டும்.

ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமி உத்தரவின்பேரில், கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி 256 அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் தொடர்பாக அறிவிப்பு வெளியானது.

https://recruitment.py.gov.in மற்றும் https://dpar.py.gov.in என்ற இணையதளத்தில் ஏப்ரல் 25ம் தேதி விண்ணப்பம் வரவேற்கப்படும் என, வெளியிடப்பட்டது. இதேபோல் 26 இளநிலை நுாலக உதவியாளர் பணியிடங்களுக்கு அதே தேதியில் விண்ணப்பம் வரவேற்கப்பட்டது. லோக்சபா தேர்தல் காரணமாக இந்த 282 அரசு பணியிடங்களுக்கான விண்ணப்பம் வரவேற்பு தேதி குறிப்பிடாமல் நிர்வாக சீர்த்திருத்த துறை தள்ளி வைத்தது. இதனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு உதவியாளர், 10 ஆண்டுகளுக்கு பிறகு இளநிலை நுாலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காத்திந்த பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்ததும், முதலில் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்க நிர்வாக சீர்த்திருத்த துறை முடிவு செய்துள்ளது.

இதேபோல் கடந்தாண்டு விண்ணப்பம் பெறப்பட்ட அரசு பணியிடங்களுக்கு அடுத்தடுத்து எழுத்து தேர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இதற்கான அட்டவணை தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us