ADDED : மார் 03, 2025 03:51 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம் : மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த முதியவர் இறந்தார்.
அரியாங்குப்பம் வாஞ்சிநாதன் வீதியை சேர்ந்தவர் அசோகன், 68; இவரது மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். அப்போதிலிருந்து, அசோகன் அதிகமாக மது குடித்து வந்தார்.
இந்நிலையில், மஞ்சள் காமாலை நோய் தாக்கி, மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். வீட்டில் தனியாக இருந்த அவர்,நேற்று முன்தினம் மயங்கி விழுந்து கிடந்தார். உறவினர்கள் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
