/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டை விட்டு விரட்டிய மருமகள்; கலெக்டரிடம் வயதான தம்பதி புகார்
/
வீட்டை விட்டு விரட்டிய மருமகள்; கலெக்டரிடம் வயதான தம்பதி புகார்
வீட்டை விட்டு விரட்டிய மருமகள்; கலெக்டரிடம் வயதான தம்பதி புகார்
வீட்டை விட்டு விரட்டிய மருமகள்; கலெக்டரிடம் வயதான தம்பதி புகார்
ADDED : மே 18, 2024 06:29 AM

திருபுவனை : வீட்டை விட்டு விரட்டிய மருமகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வயதான தம்பதி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
புதுச்சேரி திருபுவனை அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் திருக்கனுார் சாலையில் வசித்து வருபவர் வதிஷ்டா, 67. இவர், தனது கணவர் நாராயணன், 77, என்பவருடன் நேற்று புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.
அதில், எனது மருமகள் மகேஸ்வரி, மூத்த குடிமக்களான என்னையும், என் கணவரையும் அடித்து, எனக்கு சொந்தமான வீட்டில் இருந்து துரத்தி விட்டார். இது குறித்து திருபுவனை காவல் நிலையம் மற்றும் துணை கலெக்டர் (தெற்கு) ஆகியோரிடம் புகார் அளித்திருந்தோம். துணை கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, வீட்டை விட்டு வெளியேற்றிய எனது மருமகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் வீட்டை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.