/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேர்தல் பணி குழு ஏற்படுத்திட முடிவு
/
காங்., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேர்தல் பணி குழு ஏற்படுத்திட முடிவு
காங்., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேர்தல் பணி குழு ஏற்படுத்திட முடிவு
காங்., வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தேர்தல் பணி குழு ஏற்படுத்திட முடிவு
ADDED : மார் 23, 2024 06:13 AM

புதுச்சேரி : தேர்தல் பணி குழு ஏற்படுத்தி லோக்சபா தேர்தலை சந்திப்பது என காங்.,வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., மீண்டும் நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் வேட்பாளர் அறிமுகம் கூட்டம் வைசியால் வீதியில் உள்ள காங்., அலுவலகத்தில் நடந்தது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா, அவைத் தலைவர் சிவக்குமார், காங்., எம்.எல்.ஏ., வைத்தியநாதன், தி.மு.க., எம்.எல்.ஏ.கள் அனிபால் கென்னடி, சம்பத், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், இ.கம்யூ.,மாநில செயலாளர் சலீம், மா.கம்யூ., செயலாளர் ராஜாங்கம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து காங்., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அடங்கிய தேர்தல் பணி குழு ஏற்படுத்தி லோக்சபா தேர்தலை சந்திப்பது என முடிவு செய்யப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் செயல்படாத தன்மை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி ஏற்றம், ஆட்சி குளறுபடிகளை மக்களிடம் கொண்டு சென்று தேர்தலை எதிர் கொள்ளுவது என முடிவு எடுக்கப்பட்டது.

