/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பாகூர் தொகுதியில் ஓட்டு சேகரிப்பு
/
காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பாகூர் தொகுதியில் ஓட்டு சேகரிப்பு
காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பாகூர் தொகுதியில் ஓட்டு சேகரிப்பு
காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பாகூர் தொகுதியில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 16, 2024 06:39 AM

பாகூர்: பாகூர் தொகுதியில் ஓட்டு சேகரித்த காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், ராகுல்காந்தி பிரதமரானால், காஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் என்றார்.
புதுச்சேரி லோக்சபா தேர்தல் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், பாகூர் தொகுதியில் நேற்று 'கை' சின்னத்திற்கு ஓட்டுகள் சேகரித்தார்.தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா, செந்தில்குமார் எம்.எல்.ஏ., கம்யூ., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பிரசாரத்தில் வேட்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது; கடந்த 10 ஆண்டுகளில் அரிசி, பருப்பு, காஸ் சிலிண்டர், பெட்ரோல் என அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டது. வேலைவாய்ப்புகள் இல்லை, கூலி உயர்வு இல்லை. இந்த மாதிரியான சூழலில் ஒருமாற்றம் வந்தால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள்.மத்தியில் யார் ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் கேள்வி. ராகுல்காந்தி, மோடி இவர்களில்யார் பிரதமராக வந்தால் நன்றாக இருக்கும்.
கர்நாடகாவில் 500 ரூபாய்க்கு காஸ் சிலிண்டர் கொடுக்கிறோம். பெண்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கொடுத்து வருகிறோம். அங்கு, காங்., ஆட்சி நடப்பதால் தான் இது சாத்தியமாகி உள்ளது.ராகுல்காந்தி பிரதமரானால், காஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தருவதாக கூறி உள்ளார்.
பெண்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும். 30 லட்சம் அரசு பணியிடங்கள், ஆட்சி பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் நிரப்பப்படும். இதில், 15 லட்சம் பணியிடங்கள் பெண்களுக்கு வழங்கப்படும். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு வெள்ளை அரிசி வழங்கப்படும். இவை எல்லாம் வேண்டுமா?வேண்டமா? என நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். வேண்டும் என்றால், 'கை' சின்னத்தில் ஓட்டுகள் போட்டு ராகுல்காந்தியை பிரதமாராக்கிட வேண்டும் என்றார்.

