
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்னல் பழுது
வில்லியனுார் கோட்டைமேடு, சந்திப்பில் சிக்னல் எரியாமல் இருப்பதால், வாகனங்கள் தாறுமாறாக செல்கிறது.
ரகு, கோட்டைமேடு.
-----------------------------------------------கழிவு நீர் தேக்கம்
லாஸ்பேட்டை கபிலன் நகர், இ.சி.ஆர்.,ரில் காலிமனையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
கேசவன், லாஸ்பேட்டை.
போக்குவரத்திற்கு இடையூறு
அரியாங்குப்பம், ஆரோக்கிய மாதா கோவில் முன்பு ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
கிறிஸ்டோபர், அரியாங்குப்பம்.
சாலையோர செடிகள் அகற்றப்படுமா
புதுச்சேரி - கடலுார் சாலையில் இருபுறங்களில் வளர்ந்துள்ள செடிகளை, அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உமாசங்கர், பிள்ளையார்குப்பம்.

