/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு பொது நுழைவு தேர்வு; சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிப்பு

ADDED : மே 23, 2024 05:39 AM
புதுச்சேரி : பி.எஸ்சி. நர்சிங் படிப்பிற்கு பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
சுகாதாரத்துறை இயக்கு னர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கடந்த கல்வியாண்டு 2023-24 வரை பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கான சேர்க்கை, மாணவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டின் இடங்கள் நிரப்பட்டது.
இதற்கிடையில், இந்திய நர்சிங் கவுன்சில் கடந்த 08.04.2023 தேதி வெளியிட்ட கடிதத்தின் மூலம் பி.எஸ்சி., நர்சிங் சேர்க்கைக்கு பொது நுழைவு தேர்வு கட்டாமாக்கி உள்ளது.
2023-24ம் கல்வி ஆண்டில் இருந்து மாநில அரசு பல்கலைக்கழகத்தால் நர்சிங் படிப்பிற்கு பொது நுழைவு தேர்வு நடத்தப்பட வேண்டும். இருப்பினும், புதுச்சேரி அரசின் வேண்டுகோளின்படி 2023-24ம் கல்வியாண்டிற்கு ஒரு முறை விளக்கு அளிக்கப்பட்டது. 2024-25ம் ஆண்டிற்கு இந்திய நர்சிங் கவுன்சில், டில்லி செயலரின் கடந்த ஜனவரி 29ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி, பொது நுழைவு தேர்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, பி.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு, செவிலியர் தேர்வு வாரியத்தால், சென்டாக் அரசு ஒதுக்கீட்டின் இடங்களை நிரப்ப கடந்த ஏப். 15ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, தேர்வு தேதி, பொது நுழைவுத்தேர்வை நடத்துவதற்கான விண்ணப்ப பதிவு துவங்கும் தேதி ஆகியவை சென்டாக் இணையதளத்தில் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.