/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவம் துவக்கம்
/
திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவம் துவக்கம்
ADDED : மே 15, 2024 12:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : வில்லியனுார் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் திருத்தேர் பிரமோற்சவ விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதையொட்டி அன்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று முதல் வரும் 24ம் தேதி வரை காலை சுவாமிக்கு அபிேஷக ஆராதனை, மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
வரும் 20ம் தேதி திருக்கல்யாணம வைபவம், 21ம் தேதி காலை திருத்தேர் விழா, 22ம் தேதி மாலை தெப்பல் உற்சவம், 24ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

