/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொம்யூன் ஆணையர்கள் நியமன விவகாரம் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
/
கொம்யூன் ஆணையர்கள் நியமன விவகாரம் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
கொம்யூன் ஆணையர்கள் நியமன விவகாரம் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
கொம்யூன் ஆணையர்கள் நியமன விவகாரம் விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு
ADDED : மே 17, 2024 05:31 AM
புதுச்சேரி: இரண்டு கொம்யூன் ஆணையர்கள் நியமனம் மீதான குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழ்நிலையில், கலெக்டர் குலோத்துங்கன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழிலரசன்.
இவர்களை, பஞ்சாயத்து ஆணையராக நியமித்தது சட்ட விரோதமானது என தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் புகார் தெரிவித்து, கடந்த பிப்ரவரி மாதம் கலெக்டர், லஞ்ச ஒழிப்பு துறை உள்பட பல்வேறு துறைகளுக்கு மனு அளித்து இருந்தார்.
இந்த புகாரின் மீது கலெக்டர் குலோத்துங்கன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். தெற்கு சப் கலெக்டர் சோமா சேகர் அப்பாராவ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இருவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்வார்.
கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கிரேடு-1, கிரேடு-2 என்ற இரண்டு நிலைகளில் உள்ளது.
டெபுடேஷன் அடிப்படையிலான கவுரவ பதவி யான கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பதவிக்கு பல்வேறு துறைகளில் அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பம் பெற்று, அரசு செயலர் தலைமையிலான கமிட்டி தான் இறுதி செய்கிறது.
அப்படி இருக்கும்போது இரண்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் நியமனம் தொடர்பாக கலெக்டர் குலோத்துங்கன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் பதவிக்கு கண்காணிப்பாளர் அதற்கு இணையாக கிரேடு பே உள்ளவர்கள் டெபுடேஷன் அடிப்படையில் ஓராண்டுக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் கண்காணிப்பாளர் அல்லாத அதற்கு இணையான கிரேடு பேவும் இல்லாத நல அதிகாரியாக உள்ளவர்களை கொம்யூன் பஞ்சாயத்து ஆணையராக நியமித்தது சட்ட விரோதமானது என புகார் எழுப்பப்பட்டுள்ளது.
அதேபோல் கல்வி நிறுவன கட்டடங்கள், மனைக்கான லே அவுட் விஷயங்களில் தனி அதிகாரி அனுமதி இல்லாமல் ஒப்புதல் தரக்கூடாது என்று தெரிந்தும், அனுமதி தரப்பட்டுள்ளதாக முதன்மை குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகவும் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது அரசு துறைகளில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

