/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'ஆட்சிக்கே வரமுடியாத கட்சிக்கு ஓட்டு போட்டு என்ன பிரயோஜனம்' முதல்வர் ரங்கசாமி கேள்வி
/
'ஆட்சிக்கே வரமுடியாத கட்சிக்கு ஓட்டு போட்டு என்ன பிரயோஜனம்' முதல்வர் ரங்கசாமி கேள்வி
'ஆட்சிக்கே வரமுடியாத கட்சிக்கு ஓட்டு போட்டு என்ன பிரயோஜனம்' முதல்வர் ரங்கசாமி கேள்வி
'ஆட்சிக்கே வரமுடியாத கட்சிக்கு ஓட்டு போட்டு என்ன பிரயோஜனம்' முதல்வர் ரங்கசாமி கேள்வி
ADDED : ஏப் 07, 2024 05:35 AM

பாகூர், : புதுச்சேரி பாஜ., வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி, பாகூர் தொகுதியில் பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது;
தேசிய ஜனநாயக கூட்டணி தான் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஓட்டளித்தால், அவர் மத்திய அமைச்சராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
நிதி வேண்டும் என்றால், வருவாயை அதிகரிக்க வேண்டும். அதற்காக வரி போட வேண்டும் அல்லது மத்திய அரசிடம் நிதி கேட்டு பெற வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் புதிய வரி போடப்பட்டதா, எந்த வரியும் கிடையாது. மத்திய அரசிடம் நிதி பெற்று எல்லா திடங்களையும் செயல்படுத்தி உள்ளோம். நமது வேட்பாளர் நமச்சிவாயம் வெற்றி பெற்றால், மேலும் அதிகமாக நிதியை பெற முடியும்.
வைத்திலிங்கம் எம்.பி., யாக இருந்து போது, அவரால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் எத்தனை?, கடந்த ஆட்சியில் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. .
இன்றைக்கு மத்திய அரசின் அனுமதி மற்றும் நிதி இல்லாமல் எந்த காரியத்தையும் செய்ய முடியாது. மத்திய அரசுக்கும், நமக்கும் ஒரு இணக்கமான உறவு வேண்டும். ஆட்சிக்கே வரமுடியாத கட்சிக்கு ஓட்டு போட்டால் என்ன பிரயோஜனம் இருக்கிறது. அப்படி போடுகிற ஓட்டு செல்லாத ஓட்டுக்கு சமம். நமது வேப்பாளர் நமச்சிவாயத்திற்கு தாமரை சின்னத்தில் ஓட்டு போட்டு அவரை வெற்றி பெற செய்திட வேண்டும்' என்றார்.
பிரசாரத்தின் போது, வேட்பாளர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் தியாகராஜன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் தனவேலு, தங்க விக்ரமன் உட்பட பலர் உடனிருந்தனர்.

