/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் ரங்கசாமி சுயமரியாதையை விட பதவி முக்கியம் என நினைப்பது சரியல்ல
/
முதல்வர் ரங்கசாமி சுயமரியாதையை விட பதவி முக்கியம் என நினைப்பது சரியல்ல
முதல்வர் ரங்கசாமி சுயமரியாதையை விட பதவி முக்கியம் என நினைப்பது சரியல்ல
முதல்வர் ரங்கசாமி சுயமரியாதையை விட பதவி முக்கியம் என நினைப்பது சரியல்ல
ADDED : ஏப் 09, 2024 05:03 AM

இந்திய கம்யூ., முத்தரசன் பேச்சு
புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி சுயமரியாதையை விட பதவி முக்கியம் என நினைப்பது சரியல்ல என இந்திய கம்யூ., கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசினார்.
இண்டியா கூட்டணியில், காங்., சார்பில் போட்டியிடும் வைத்திலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து, இந்திய கம்யூ., கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் ரெயின்போ நகர், வில்லியனுார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் காங்., கட்சி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், இந்திய கம்யூ. கட்சி செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள்பாலன், நாரா கலைநாதன், காங்., சிறப்பு அழைப்பாளர் வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிரசாரத்தில் முத்தரசன் பேசியதாவது;
புதுச்சேரியில் யார் வெற்றி பெற வேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்து மக்கள் வாக்களிப்பது அவசியம். நாட்டையும், ஜனநாயகம், மதசார்ப்பின்மை பாதுகாக்கும் தேர்தலாக இத்தேர்தல் உள்ளது.
பிரதமர் மோடி புதுச்சேரி மாநில அந்தஸ்து தரப்படும் என்றார்.
ஆனால், தற்போது தேர்தல் பிரசாரத்திற்கு கூட புதுச்சேரிக்கு வரவில்லை. பிரதமராக 10 ஆண்டுகள் இருந்தபோது, கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.முதல்வர் ரங்கசாமி சுயமரியாதையை விட பதவி முக்கியம் என நினைப்பது சரியல்ல.
அவர் பா.ஜ., நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறார். அதை வெளிப்படையாக பல முறை கூறியுள்ளார். பா.ம.க., சமூக நீதிக்காக போராடுவதாக கூறுகிறார்கள். ஆனால், சாதி வாரிக் கணக்கெடுப்பை எதிர்க்கும் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்திருப்பது சரியல்ல.சென்னையில் இருந்து ரயிலில் பிடிப்பட்ட பணம் விவகாரத்தில் நயினார்நாகேந்திரன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், தேர்தல் ஆணையம் நேர்மையுடன் நடந்து கொள்வது அவசியம். தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களுக்கு வெளிமாநிலங்களில் இருந்து பணம் வந்துள்ளது.
அவர்களின் வீடுகளில் தேர்தல் அதிகாரிகள் சோதனையிட வேண்டும் என கூறினார்.

