
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவத்தையொட்டி, தேர் திருவிழா நடந்தது.
காரைக்கால், கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி விநாயகர், சுப்ரமணியர், கைலாசநாதர், சுந்தாம்பாள், சண்டிகேஸ்வர், அஸ்திரதேவர் சுவாமிகள் வீதியுலா நடந்தது.
நேற்று முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதர், தனிஅதிகாரி காளிதாஸ் ஆகியோர் முன்னிலையில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர்.

