நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் பொறையாத்தம்மன் கோவிலில் சித்திரை திருவிழாயொட்டி சாகை வார்த்தல் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மதகடிப்பட்டு-கரியமாணிக்கம் சாலையில் அமைந்துள்ள பொறையாத்தமன் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது.
மதியம் 1 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு 108 பால்குட அபி ேஷகம் நடந்தது. பின் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6.00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. இதில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

