/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பீர் பாட்டிலால் தாக்கு இருவர் மீது வழக்கு
/
பீர் பாட்டிலால் தாக்கு இருவர் மீது வழக்கு
ADDED : செப் 11, 2024 12:14 AM
திருக்கனுார்: சந்தை புதுக்குப்பத்தில் முன்விரோத தகராறில் பீர் பாட்டிலால் தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புது குப்பம் ஒத்தவாடை வீதி சேர்ந்தவர் அருணாச்சலம், 26; லேப் டெக்னீசியன். இவருக்கும் சந்தை புதுக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஆளவந்தான், 21; என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆளவந்தான் அருணாச்சலத்தின் தம்பி கோவிந்தராஜை மொபைல் போனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளால் திட்டி நேரில் வரும்படி மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து கோவிந்தராஜ், அருணாச்சலம் மற்றும் தனுஷ் ஆகியோர் சந்தை புதுக்குப்பம் பெட்ரோல் பங்க் அருகே சென்றுள்ளனர். அங்கு நின்றிருந்த ஆளவந்தான் மற்றும் அவரது நண்பர் எறையூர் பகுதியை சேர்ந்த முருகன் தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு மோதிக்கொண்டனர்.
இதில், ஆளவந்தான் மற்றும் அவரது நண்பர் முருகன் இணைந்து அருணாச்சலம், கோவிந்தராஜ், தனுஷ் ஆகியோரை பீர் பாட்டில் தாக்கியுள்ளனர். அருணாச்சலம் புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் ஆளவந்தான், முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

