/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் உதவி பொறியாளர் தந்தைக்கு கொலை மிரட்டல் 2 பேர் மீது வழக்கு
/
மின் உதவி பொறியாளர் தந்தைக்கு கொலை மிரட்டல் 2 பேர் மீது வழக்கு
மின் உதவி பொறியாளர் தந்தைக்கு கொலை மிரட்டல் 2 பேர் மீது வழக்கு
மின் உதவி பொறியாளர் தந்தைக்கு கொலை மிரட்டல் 2 பேர் மீது வழக்கு
ADDED : மே 20, 2024 04:02 AM
காரைக்கால் : காரைக்காலில் மின்துறை உதவி பொறியாளர் நிலத்தில் அத்துமீறி நுழைந்து சிமென்ட் சிலாப் கட்டையை சோதப்படுத்திய இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, முதலியார்பேட் கஜாநகர் பாரதியார் சாலையை சேர்ந்த ரவிச்சந்திரன், 57;இவர் புதுச்சேரி மின்துறையில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது சொந்த ஊரான காரைக்கால் அடுத்த முப்பைத்தங்குடியில் இவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது.
கடந்த 8ம் தேதி முப்பைத்தங்குடி கிராமத்தை சேர்ந்த பக்கிரிசாமி மகன் மாரியப்பன் அனுமதி இன்றி ஜெ.சி.பி., இயந்திரம் மூலம் ரவிச்சந்திரன் நிலத்தில் அத்துமீறி நுழைந்து ரூ.1லட்சம் மதிப்பில் உள்ள சிமென்ட் சிலாப் கட்டையை சேதப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ரவிச்சந்திரன் திருநள்ளார் போலீசில் புகார் செய்தார்.
இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன், ரவிச்சந்திரன் வீட்டிற்கு சென்று ரவிச்சந்திரன் தந்தை தங்கவேலை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
திருநள்ளார் போலீசார் மாரியப்பன் மற்றும் ஜெ.சி.பி., ஓட்டுனர் அப்பு ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

