/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி கல்லுாரிகளில் தமிழக மாணவர்கள் சேர முடியுமா? 'தினமலர்' வழிகாட்டியில் பதில்

ADDED : மார் 31, 2024 03:39 AM
புதுச்சேரி : 'தினமலர்' வழிகாட்டியில் சென்டாக் கவுன்சிலிங் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர் எழுப்பிய சந்தேகங்களுக்கு புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் அழகுமூர்த்தி பதில் கூறியதாவது;
தமிழக மாணவர்கள் புதுச்சேரியில் 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து இருந்தால், இடம் பெயர்ந்தோர் என்ற பிரிவின் கீழ், புதுச்சேரி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பொது பிரிவில் சேரலாம்.
இடஒதுக்கீடு பெற எஸ்.சி.,யாக இருந்தால் 1964 முன்பு இருந்திற்கான ஆதாரமும், ஓ.பி.சி.க்கு 2001ம் பிப். 10 முன்பு இருந்த ஆதாரம் இருந்தால் தான் அதற்கான சான்றிதழ் கொடுப்பர்.
அந்த ஆண்டிற்கு பின்பு வந்தவர்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் என சான்றிதழ் தருவர். இதை கொண்டு பொது பிரிவில் சேரலாம். மத்திய அரசு நிறுவனங்களில் ஓ.பி.சி., பிரிவில் விண்ணப்பிக்க முடியும்.
ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் தனித்தனி 'கட்ஆப்' உள்ளது. கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பொது பிரிவில் 'நீட்' 601 மதிப்பெண் பெற்ற பெண் முதல் ஆளாக சேர்ந்தார். ஓ.பி.சி., பிரிவில் 110 மதிப்பெண் பெற்றவருக்கு கூட இடம் கிடைத்தது. பல இடஒதுக்கீடு பிரிவு உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒரு 'கட்ஆப்' மதிப்பெண் உள்ளது.
அவை ஒவ்வொரு ஆண்டும் மாறும். ஏனென்றால் இந்தாண்டு அதிக மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றால் 'கட்ஆப்' மாறும். கடந்த ஆண்டை விட இந்தாண்டு நீட் அதிக மதிப்பெண் வரும்.
அதனால் 'கட்ஆப்' மதிப்பெண்ணும் உயரும் என்றார்.