தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்

பி.எஸ்.என்.எல்., சிறப்பு முகாம் புதுச்சேரியில் இன்று துவக்கம்


ADDED : ஜூன் 26, 2024 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2024 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில், பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம் இன்று துவங்குகிறது.

இது குறித்து முதன்மை பொதுமேலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு மேளா விற்பனை முகாம் இன்று 26ம் தேதி துவங்கி வரும் 29ம் தேதி வரை, நான்கு நாட்கள் நடக்கிறது.

முகாம், மேட்டுப்பாளையம் தபால் அலுவலகம் அருகில், மகாத்மா காந்தி மருத்துவக்கல்லுாரி அருகில், கரியமாணிக்கம், தவளக்குப்பம் ஜங்ஷன், திருக்கனுார், மதகடிப்பட்டு, பாகூர், வில்லியனுார், ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களுடைய தற்போதைய எண்ணை மாற்றாமல், அதிவேக எப்.டி.டி.எச் தொழில்நுட்பத்திற்கு லேண்ட் லைன் எண்ணை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம்.

அதற்கான மோடம் இலவசம். புதிய எப்.டி.டி.எச் இணைப்பு ரூ.329 முதல் மற்றும் கிராமப்புறங்களில் ஆறு மாதங்களுக்கு, ரூ.999,க்கு கிடைக்கும். ரூ.269 மதிப்புள்ள சிம்கார்டு, ரூ.50.,க்கு வழங்கப்படுகிறது.

இந்த சிம்கார்டில், 45 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு, 2 ஜி.பி., டேட்டா, அளவில்லாமல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம். பிறநெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என்.எல்.,க்கு வருபவர்களுக்கு ரூ.269 மதிப்புள்ள சிம் இலவசம். தற்போதுள்ள, 2ஜி மற்றும் 3ஜி, சிம் வைத்திருப்பவர்கள் 4ஜி சிம்மிற்கு மேம்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us