/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பத்திர பதிவு அலுவலகங்களில் லஞ்சம் கவர்னர் தலையிட கோரிக்கை
/
பத்திர பதிவு அலுவலகங்களில் லஞ்சம் கவர்னர் தலையிட கோரிக்கை
பத்திர பதிவு அலுவலகங்களில் லஞ்சம் கவர்னர் தலையிட கோரிக்கை
பத்திர பதிவு அலுவலகங்களில் லஞ்சம் கவர்னர் தலையிட கோரிக்கை
ADDED : மே 17, 2024 05:32 AM
புதுச்சேரி: பத்திர பதிவு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கின்றது என, அ.தி.மு.க., துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி அரசின் பத்திரப்பதிவுத்துறையில் லஞ்சம் கோர தாண்டவம் ஆடுகிறது. எந்த பத்திரத்தை பதிவு செய்ய வேண்டும் என்றாலும், லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது.
வில்லியனுார், பாகூர், திருக்கனுார் போன்ற பகுதிகளில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் எந்த பத்திரத்தையும் உடனடியாக பதிவு செய்வதே இல்லை.
சார் பதிவாளர்கள் பற்றாக்குறை என்ற மாய தோற்றத்தை ஏற்படுத்தி லஞ்சம், ஊழலுக்கு வித்திடுகின்றனர். குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் எந்த பத்திரமும் பதிவு செய்யப்படுகிறது. இதனால் கிராமப்புறங்களில் வீடு, மனை வாங்க பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.
புதுச்சேரியில் மனை, வீடு வாங்க விரும்புவோர் பத்திரப்பதிவுத்துறையின் அடாவடியில் எந்த சொத்தையும் வாங்குவதற்கு முன்வருவதில்லை. இதுகுறித்து கவர்னர் தலையிட்டு பத்திரப் பதிவுத்துறையில் நடக்கும் லஞ்சம், ஊழலை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து கிராமப்புற பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் சார் பதிவாளர் பணியில் இருக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

