/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., கட்சி கொடுத்ததை எடுப்பது தான் பா.ஜ.,வின் வேலை
/
காங்., கட்சி கொடுத்ததை எடுப்பது தான் பா.ஜ.,வின் வேலை
காங்., கட்சி கொடுத்ததை எடுப்பது தான் பா.ஜ.,வின் வேலை
காங்., கட்சி கொடுத்ததை எடுப்பது தான் பா.ஜ.,வின் வேலை
ADDED : ஏப் 06, 2024 05:35 AM

திருபுவனையில் வைத்திலிங்கம் பேச்சு
புதுச்சேரி: காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், திருபுவனை தொகுதியில் பிரசாரம் செய்து பேசியதாவது;
மகளிருக்கு ரூ. 1,000 உரிமை தொகை, அரிசி கொடுக்கவில்லை. மின் கட்டணத்தை உயர்த்திவிட்டனர். திருபுவனை தொகுதி மக்களுக்கு, ரங்கசாமியும், பா.ஜ.,வும் எந்த வேலையும் கொடுக்கவில்லை. பிரதமர் மோடி தருவதாக கூறிய பணமும் வழங்கவில்லை.
காங்., கொடுத்ததை எல்லாம் எடுப்பது தான் பா.ஜ.,வின் வேலை. அரிசி கொடுத்ததை நிறுத்தி விட்டனர். மின்துறையை தனியார் மயமாக்குவேன் என நமச்சிவாயம் ஒற்றை காலில் நிற்கிறார்.
புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கஞ்சா கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், கஞ்சா விற்பவர்களை போலீசார் கைது செய்யவில்லை. இதற்கு காரணம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்.
காங்., ஆட்சியில் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. இன்று, விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் பொருத்தி, மின் கட்டணம் வசூலிக்க உள்ளனர். மின் கட்டணம் போட்டால், 5 எச்.பி. மோட்டாருக்கு ரூ. 20 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ. 2.40 லட்சம் வரை கட்டணம் செலுத்த வேண்டும். அதன் பிறகு எந்த விவசாயியும் விவசாயம் செய்ய முடியாது.
இலவச திட்டங்கள் கொடுத்த காங்., வேண்டுமா, காசு பறிக்கும் பா.ஜ., வேண்டுமா என யோசித்து கை சின்னத்திற்கு ஓட்டு அளிக்க வேண்டும்' என்றார்.
பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,கள் அனந்தராமன், நாரா கலைநாதன், வி.சி., கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

