/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்து பெற தகுதியான சூழலை உருவாக்கி வருகிறோம் பா.ஜ., மாநில தலைவர் தகவல்
/
மாநில அந்தஸ்து பெற தகுதியான சூழலை உருவாக்கி வருகிறோம் பா.ஜ., மாநில தலைவர் தகவல்
மாநில அந்தஸ்து பெற தகுதியான சூழலை உருவாக்கி வருகிறோம் பா.ஜ., மாநில தலைவர் தகவல்
மாநில அந்தஸ்து பெற தகுதியான சூழலை உருவாக்கி வருகிறோம் பா.ஜ., மாநில தலைவர் தகவல்
ADDED : ஆக 25, 2024 05:47 AM
புதுச்சேரி: மாநில அந்தஸ்து பெற தகுதியான சூழலை உருவாக்கி வருகிறோம் என, பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி., தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
புதுச்சேரிக்கு சுய ஆட்சி தான் முக்கியம். புதுச்சேரியில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த காங்., மாநில அந்தஸ்தினை பெறவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் அரை நுற்றாண்டுகளுக்கு மேலாக மத்திய அமைச்சர்களாக இருந்தனர். அப்போது மாநில அந்தஸ்தினை பெற்று தரவில்லை.
ஆனால் நாங்கள் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ் தினை பெற்றுதர உறுதுணையாக இருப்போம்.பிரதமர், உள்துறை அமைச்சர் வீட்டு கதவுகள் முதல்வருக்காக திறந்தே இருக்கிறது.
முதல்வர் ரங்கசாமியை டில்லிக்கு அழைத்து செல்வது எங்களுடைய கடமை. புதுச்சேரி மாநில அந்தஸ்து பெறுவதற்கான தகுதியான சூழல் உருவாக வேண்டும். அதற்கான முயற்சிகளை பா.ஜ., எடுத்து வருகிறது.
புதுச்சேரி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் மீதும் புகார் கூறியிருப்பதாக கேள்வி எழுப்புகின்றனர். புதுச்சேரி எம்.எல்.ஏ.,க்கள் அடிமைகள் இல்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்பட தான் அனுமதி அளிக்கிறோம். அதன் அடிப்படையில் அவர்கள் தங்களுடைய கருத்து களை தெரிவித்தனர்.
தங்களுடைய தொகுதிக்கு தேவையான வளர்ச்சிதிட்டங்களை கேட்டனர்.
அவர்கள் டில்லிக்கு சென்று புகார் தெரிவித்ததாக கூறுகின்றனர். அப்படி அவர்கள் கூட்டணிக்கு எதிராக புகார் செய்தற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இரண்டு ஆண்டுகளில் புதுச்சேரி பெஸ்ட் புதுச்சேரியாக மாறும்' என் றார். சந்திப்பின்போது அசோக்பாபு எம்.எல்.ஏ., பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், மவுலிதேவன் உடனிருந்தனர்.

