தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அனுமதியின்றி பேனர் போலீசார் வழக்கு பதிவு 

அனுமதியின்றி பேனர் போலீசார் வழக்கு பதிவு 

அனுமதியின்றி பேனர் போலீசார் வழக்கு பதிவு 


ADDED : மார் 14, 2025 04:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2025 04:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி இ.சி.ஆரில் அனுமதியின்றி பேனர் வந்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் அனுமதியின்றி டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டு, சாலைகளில் அனுமதி இல்லாமல் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று முன்தினம் இ.சி.ஆர்., லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை சந்திப்பு - சிவாஜி சிலை பகுதி வரை போக்குவரத்திற்கு இடையூராகவும், நடைப்பாதையை ஆக்கிரமித்தும் விளம்பர வரவேற்பு டிஜிட்டல் பேனர்கள், கொடி கம்பங்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து, பொதுப்பணித்துறை, தேசிய நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ஜெயராஜ் லாஸ்பேட்டை போலீசார் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், அனுமதியின்றி டிஜிட்டல் பேனர் வைத்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், இ.சி.ஆர். சாலை, ராஜிவ் சிக்னல் பகுதி சென்டர் மிடியனில் போக்குவரத்திற்கு இடையூராக டிஜிட்டல் பேனர், கட் அவுட் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக, கோரிமேடு போலீசார் பேனர் வைத்த நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us