/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இறைச்சி, மீன் விற்க தடை
/
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இறைச்சி, மீன் விற்க தடை
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இறைச்சி, மீன் விற்க தடை
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இறைச்சி, மீன் விற்க தடை
ADDED : ஏப் 21, 2024 05:31 AM
புதுச்சேரி: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று 21ம் தேதி இறைச்சி, மீன் விற்பனை செய்ய உழவர்கரை நகராட்சி தடை விதித்துள்ளது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று 21ம் தேதி, மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, இறைச்சி, மீன் மற்றும் இதர மாமிச வகைகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
எனவே, இன்று இறைச்சி, மீன் மற்றும் இதர மாமிசங்கள் விற்பனையை தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
மீறி செயல்படும் கடைகள் மற்றும் இறைச்சி கூடங்களுக்கு சீல் வைக்கப்படும். மேலும் அங்கு வைத்திருக்கும் இறைச்சி மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தும் கருவிகள், பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் விற்பனையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.