/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுரிமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
ஓட்டுரிமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 03, 2024 03:18 AM

புதுச்சேரி : உலக ஆட்டிசம் தினத்தையொட்டி, சத்யா சிறப்புப் பள்ளி மற்றும் புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி ஏற்பாட்டில் ஓட்டுரிமை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பல்நோக்கு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், சத்யா சிறப்புப் பள்ளி, பாத்திமா மேல்நிலைப் பள்ளி மற்றும் குயிலாப்பாளையம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இணைந்து பொது மக்களிடையே ஓட்டுரிமை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில், 100 சதவீதம் ஓட்டு அளிக்கும் உரிமையை வலியுறுத்தி, மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு நடனம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி உதவித் தேர்தல் அலுவலர் சுரேஷ்ராஜ், துணைத் தலைமைத் தேர்தல் அதிகாரிஆதர்ஷ், மாநில நோடல் அலுவலர் கோவிந்தசாமி, சத்யா சிறப்பு பள்ளி இயக்குனர் சித்ரா ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

