/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 02, 2024 04:35 AM

புதுச்சேரி : முதன் முறையாக ஓட்டு அளிக்கும் கல்லுாரி மாணவர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி தனியார் பொறியியல் கல்லுாரியில் நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் என்ற திட்டத்தின் கீழ் முதல் முறையாக ஓட்டளிக்க உள்ள கல்லுாரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் பிரதீப் தேவநேயன் வரவேற்றார். புதுச்சேரி தெற்கு சார்பு மாவட்ட கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கொட்டாரு, நிகழ்ச்சியை துவக்கிவைத்து தேர்தல் சம்பந்தப்பட்ட விதி மீறல்களை சிவிஜில். மொபைல் செயலி மூலம் தெரியப்படுத்தலாம் என தெரிவித்தார்.
நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை இயக்குனர் மற்றும் உதவி மாவட்ட தேர்தல் அதிகாரி செந்தில்குமார் வாழ்த்தி பேசினார். வாக்காளர் விழிப்புணர்வுக்காக மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் தயாரித்துள்ள குறும்படம் காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கல்லுாரி வாக்காளர் கல்வி பிரிவு நோடல் அதிகாரி பிரதீப் ஒருங்கிணைத்தார். கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

