ADDED : ஏப் 04, 2024 01:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தாகூர் அரசு கலை கல்லுாரியில் பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி கருத்தரங்கு கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுனித வரவேற்றார். கல்லுாரி முதல்வர் சசிகாந்த தாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெண்கள் செயல்பாட்டுக்குழு செயலர் மார்க்ரெட் நிக்கோலஸ், சமுதாயத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்கொடுமைகள் அதில் இருந்து மீள்வதற்கு வழிமுறைகள் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.
பேராசிரியர்கள் வேலுராஜ், கணினித்துறை தலைவர் முருகன் உட்பட பேராசியர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.பேராசிரியர் ரேவதி நன்றி கூறினார்.

