/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
/
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம்
ADDED : ஏப் 08, 2024 05:39 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம், புதுச்சேரி ரோட்டரி காஸ்மோஸ் குழுவுடன் இணைந்து, 100 சதவீத ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி, நுாறு தன்னார்வலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி உதவி சப் கலெக்டர் யஷ்வந்த் மீனா, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கந்தசாமி மற்றும் புதுச்சேரி ரோட்டரி காஸ்மோஸ் குழுவின் உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன்,கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே இருந்து துவங்கிய வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் புஸ்சி தெரு, மறைமலை அடிகள் சாலை வழியாக சென்று, சுப்பையா சிலை, மறைமலையடிகள் சாலை, அண்ணா சாலை, ராஜா தியேட்டர், காமராஜர் சாலை வழியாக சென்று, வழுதாவூர் சாலையில் உள்ள இந்திரா காந்தி கல்லுாரியில் நிறைவடைந்தது.
5 கி.மீ., நடந்த ஊர்வலத்தில் தன்னார்வலர்கள், ரோட்டரி காஸ்மோஸ் குழு உறுப்பினர்கள் பங்கேற்று, 'உங்கள் ஓட்டு உங்கள் உரிமை, உங்கள் ஓட்டு உங்கள் எதிர்காலம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முன்னதாக, நுாறு சதவீத ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி நடத்தப்பட்ட கையெழுத்து இயக்ககத்தினைமாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.

