/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., பஸ் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்
/
பி.ஆர்.டி.சி., பஸ் மூலம் விழிப்புணர்வு பிரசாரம்
ADDED : ஏப் 15, 2024 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : நுாறு சதவீத ஓட்டுப் பதிவினை வலியுறுத்தி பி.ஆர்.டி.சி., பஸ்சில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று துவங்கியது.
புதுச்சேரி தேர்தல் அலுவலகம் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி, வில்லுப்பாட்டு, தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பாக, புதுச்சேரியில் இயங்கும் பி.ஆர்.டி.சி., பஸ்களில் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பெரிய அளவிலான பேனர் வைத்து புதுச்சேரி வாக்காளர்களிடையே விழிப்பணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

