ADDED : ஏப் 15, 2024 03:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கோவிலில் பூஜை செய்த குருக்களை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி தந்தை பெரியார் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் 48, இவர் காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் குருக்களாக உள்ளார். கல்யாணசுந்தரம் நேற்று முன்தினம் கோவிலில் நித்திய பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தினமும் கோவிலுக்கு வரும் ராமலிங்கம் முன்விரோதத்தில் கல்யாணசுந்தரத்தை சரமரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த கல்யாணசுந்தரம் அரசு பொது மருத்துவனைமயில் சிகிச்சை எடுத்து பெரிய கடை போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

