sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 19, 2026 ,பங்குனி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சங்க ஆலோசனை கூட்டம்

/

சங்க ஆலோசனை கூட்டம்

சங்க ஆலோசனை கூட்டம்

சங்க ஆலோசனை கூட்டம்


ADDED : மே 27, 2024 05:13 AM

Google News

ADDED : மே 27, 2024 05:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார உதவியாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், முல்லை நகரில் உள்ள சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.

சங்கத் தலைவர் திருமலை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன், சுகாதார சம்மேளன தலைவர் முனுசாமி, பொதுச்செயலாளர் ஜவகர், பொருளாளர் மணிவண்ணன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் பருவ முழைக்கு பின் டெங்கு காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. டெங்கு கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, நகராட்சி, பொதுப்பணித்துறை, கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்துவதால் மட்டும் கட்டுப்படுத்தி விட முடியாது. டெங்கு கட்டுப்படுத்தும் பணியில் களத்தில் தீவிரமாக மேற்கொண்டால் தான் நல்ல முடிவு கிடைக்கும்.

டெங்கு கட்டுப்படுத்தும் பணி மேற்பார்வை செய்யும் சுகாதார ஆய்வாளர் பணியிடத்தில், 15 இடங்கள் காலியாக கிடக்கிறது. சுகாதார ஆய்வாளர் பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பதவி உயர்வு மூலம் சுகாதார பணியாளர் நிரப்பும் பணியை துாரிதப்படுத்த வேண்டும். பதவி உயர்வு மூலம் காலியாகும் சுகாதார உதவியாளர் பணியிடங்களை, ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களுடன் சேர்த்து நிரப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்க அமைப்பு செயலாளர் கிரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us