/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்.,வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ரூ.20.82 கோடி மதிப்பில் சொத்துகள்
/
காங்.,வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ரூ.20.82 கோடி மதிப்பில் சொத்துகள்
காங்.,வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ரூ.20.82 கோடி மதிப்பில் சொத்துகள்
காங்.,வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ரூ.20.82 கோடி மதிப்பில் சொத்துகள்
ADDED : மார் 28, 2024 04:27 AM
புதுச்சேரி : காங்.,வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு 20 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
புதுச்சேரி லோக்சபா காங்., வேட்பாளரான வைத்திலிங்கம் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பு விவரம்:அசையும் சொத்துகளான கையிருப்பு பணம், பங்கு முதலீடு, வாகனங்கள், நகைகள் ஆகியவை வைத்திலிங்கத்துக்கு ரூ. 2.85 கோடிக்கும், அவரது மனைவி சசிகலா ரூ. 3.63 கோடியும், குடும்பச்சொத்தாக ரூ. 3.54 கோடியும் உள்ளன.
அதேபோல் அசையா சொத்துகளில் விவசாய நிலம் வைத்திலிங்கத்துக்கு ரூ. 1.43 லட்சத்துக்கும், சசிகலா பெயரில் ரூ. 43.9 லட்சத்துக்கும், குடும்பத்தின் பெயரில் கூட்டாக ரூ. 60.55 லட்சம் மதிப்பில் உள்ளது.
விவசாயம் சாராத நிலங்கள் வைத்திலிங்கத்தின் பெயரில் ரூ. 86 லட்சத்திற்கும், வணிக கட்டடங்கள் சசிகலா பெயரில் ரூ. 55 லட்சத்துக்கும், குடும்ப பெயரில் ரூ. 1.92கோடியும் உள்ளன.
குடியிருப்பு கட்டடங்கள் வைத்திலிங்கத்தின் பெயரில் ரூ. 55 லட்சத்துக்கும், மனைவி பெயரில் ரூ. 26 லட்சத்துக்கும், அவரது குடும்பத்தின் பெயரில் ரூ. 44.5 லட்சத்துக்கும் உள்ளன. மொத்தமாக அசையாக சொத்துகள் வைத்திலிங்கத்தின் பெயரில் ரூ. 1.42 கோடிக்கும், அவரது மனைவி சசிகலா பெயரில் ரூ. 1.24 கோடிக்கும், குடும்பத்தின் பெயரில் கூட்டாக ரூ. 3.01 கோடிக்கும் உள்ளன.ஒட்டுமொத்தமாக ரூ. 20.82 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

