/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அருணை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சாதனை
/
அருணை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சாதனை
அருணை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சாதனை
அருணை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் சாதனை
ADDED : மே 20, 2024 05:09 AM

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் அருணை ஆங்கில மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பள்ளியளவில் மாணவர் மோகேஷ் 582 மதிப்பெண் பெற்று முதலிடமும், கமலக்கண்ணன் 562, பெற்று இரண்டாம் இடமும், வெங்கடேஸ்வர் 530 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர். மாணவர் கமலக்கண்ணன் வணிகவியல், பொருளியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியளவில் மாணவி அனுஷ்கா 479 மதிப்பெண் பெற்று முதலிடமும், மாணவி பிர்தெளஸ் பானு 464 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவி இந்துஜா, மாணவர் ஜெனார்த்தனன் 459 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பள்ளி முதல்வர் சந்தானம் சால்வை அணிவித்தும், தங்கநாணயங்கள் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.
பள்ளி தலைமையாசிரியை தமிழ்சந்தானம் மாணவர்களை வாழ்த்தினார். வெற்றி குறித்து பள்ளி முதல்வர் கூறுகையில் நமது பள்ளி துவங்கிய நாளில் இருந்து தொடர்ந்து பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி அளித்து வருகிறது. இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமான ஆசிரியர், ஆசிரியைகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

