/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாய்பாபா கோவிலில் ஆராதனை விழா

சாய்பாபா கோவிலில் ஆராதனை விழா

சாய்பாபா கோவிலில் ஆராதனை விழா

சாய்பாபா கோவிலில் ஆராதனை விழா

சாய்பாபா கோவிலில் ஆராதனை விழா

ADDED : செப் 03, 2024 06:31 AM


Google News
பாகூர் : கிருமாம்பாக்கத்தில் உள்ள ராஜா சாய்பாபா கோவிலில், 16ம் ஆண்டு ஆரம்ப ஆராதனை விழா நடந்தது.

புதுச்சேரி - கடலுார் சாலை கிருமாம்பாக்கத்தில் ராஜா சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில், 16ம் ஆண்டு ஆரம்ப ஆராதனை விழா நேற்று முன்தினம் நடந்தது.

அதனையொட்டி, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், குருகாயத்திரி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் தங்களது கைகளால் சாய்பாபாவிற்கு பாலாபி ேஷகம் செய்து வழிபட்டனர்.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.