/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணைவேந்தர் நியமனம் மா.கம்யூ., கோரிக்கை
/
துணைவேந்தர் நியமனம் மா.கம்யூ., கோரிக்கை
ADDED : மே 16, 2024 10:53 PM
புதுச்சேரி: புதுச்சேரிமார்க்சிஸ்ட் கம்யூ.,செயலாளர் ராஜாங்கம், மத்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான நேர்காணலை, இன்று 17ம் தேதி நடத்த கல்வி அமைச்சக உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது அமலில் உள்ளதேர்தல் நடத்தை விதிகள்,இத்தகைய நியமனங்களை அனுமதிக்காது என்பதால், இத்தகவல் கவலையளிக்கிறது.
புதுச்சேரி பல்கலை துணைவேந்தர் நியமனம் வரும் ஜூன் 5ம் தேதிக்குள் செய்ய வேண்டிய அவசர அவசியம் இல்லாததால், இந்த விஷயத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தலையிட்டு, நடத்தை விதிகள் நீக்கப்படும் வரை நேர்காணலை நடத்துவதை தவிர்க்க, இந்திய அரசின் கல்வித்துறைக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

