/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம்
/
சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 21, 2024 05:08 AM
புதுச்சேரி: இசை, நடனம், நுண்கலை படிப்புகளில் சேர சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் பி.பி.ஏ., இசை டிகிரி படிப்பில் வாய்ப்பாட்டு, வீணை, நாதஸ்வரம், புல்லாங்குழல், மிருந்தங்கம், தவில், இந்துாஸ் தானி வாய்ப்பாட்டு படிப்புகள் உள்ளன.
இதேபோல் பி.பி.ஏ., நடன படிப்பில் பரதநாட்டியம், பி.எப்.ஏ., நுண்கலை படிப்பில் ஓவியம், அப்பளைடு ஆர்ட், சிற்பம், டெக்ஸ்டைல் டிசன் உள்ளிட்ட படிப்புகள் உள்ளன.
இந்த படிப்புகளுக்கு www.centacpuducherry.in என்ற சென்டாக் இணையதளத்தில் நேற்று முதல் விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன.
அடுத்த மாதம் 3ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்பிக்கலாம் என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

