ADDED : ஆக 25, 2024 05:45 AM

திருக்கனுார்: திருக்கனுார் காவல்துறை சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் சோரப்பட்டில் நடந்தது.
திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பிரியா முன்னிலை வகித்தார்.
இன்ஸ்பெக்டர் ராஜகுமார் பேசுகையில், 'கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், குற்றச்சம்பங்களை தடுக்க பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
புதுச்சேரியில் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருவதால், இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல், நன்றாக படித்து அரசு வேலைக்கு செல்ல முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
சப் இன்ஸ்பெக்டர் பிரியா பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான போக்சோ சட்டம், குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு சட்டம் குறித்தும், மூத்த குடிமக்கள் மற்றும் மகளிர்களுக்கு ஏதேனும் உதவிகள் தேவையெனில், உடனடியாக போலீசாருக்கு தெரிவித்தால், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில், போலீசார் மற்றும் சோரப்பட்டு இளைஞர்கள், மகளிர்கள், மூத்த குடிமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
