/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாட்கோ கடனை தள்ளுபடி செய்ய அங்காளன் எம்.எல்.ஏ., கோரிக்கை
/
பாட்கோ கடனை தள்ளுபடி செய்ய அங்காளன் எம்.எல்.ஏ., கோரிக்கை
பாட்கோ கடனை தள்ளுபடி செய்ய அங்காளன் எம்.எல்.ஏ., கோரிக்கை
பாட்கோ கடனை தள்ளுபடி செய்ய அங்காளன் எம்.எல்.ஏ., கோரிக்கை
ADDED : ஆக 10, 2024 04:52 AM
புதுச்சேரி: மானிய கோரிக்கைகள்மீதான விவாதத்தில் அங்காளன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
பாட்கோவில் 7 கோடி ரூபாய்க்கு கடன் பெற்றுள்ளனர். இந்த கடனை திருப்ப செலுத்த முடியாத சூழலில் உள்ளனர். பாட்கோ கடனை தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருந்து தெளிக்க விவசாயிகளுக்கு 'ட்ரோன்' வாங்கி கொடுக்க வேண்டும். பால் சொசைட்டியில் ஊழல் முறைகேடு நடக்கிறது. இந்த ஊழலை விசாரிக்க வேண்டும். மொத்த பட்ஜெட்டில் 5 சதவீதம் மாற்றுதிறனாளிக்கு ஒதுக்க வேண்டும்.
பிற மாநிலங்களில் ஆதிதிராவிடர் அமைச்சருக்கு உள்துறை, சுகாதார துறை உள்பட முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நல துறை அமைச்சருக்கு முக்கிய பொறுப்புகள் கொடுக்காதது பல ஆண்டுகளாக தொடர்கிறது.
நீண்ட நாள் கோரிக்கைக்கு பிறகு வளர்ச்சி கவுன்சில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் கூட்டத்தை கூட்டவில்லை. சிறப்பு கூறு ஆதிதிராவிடர் துறை உள்ளிட்ட 22 துறைகளுக்கு செல்கிறது. வளர்ச்சி கவுன்சிலை கூட்டத்தால், இந்த நிதி வேறு பணிக்கு செலவிடப்படுகிறது.
மின் கட்டணத்தை காலதாமதமாக செலுத்தினால் 2 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. மின் துறை என்ன கந்துவட்டியா வசூலிக்கிறது. இந்த வட்டியை 1 சதவீதமாக குறைக்க வேண்டும். மாநிலத்தில் ஆண்டிற்கு 5 ஆயிரம் பட்டதாரிகள் படித்துவிட்டு வெளியே வருகின்றனர். எனவே புதுச்சேரியில் ஐ.டி., பார்க் ஆரம்பிக்க வேண்டும்' என்றார்.

