/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாய நவீன தொழில்நுட்ப மொபைல் செயலி பயிற்சி
/
விவசாய நவீன தொழில்நுட்ப மொபைல் செயலி பயிற்சி
ADDED : ஆக 23, 2024 06:56 AM

திருக்கனுார்: திருக்கனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாய நவீன தொழில்நுட்ப மொபைல் செயலிகள் தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது.
வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார். முகாமில் காரைக்கால் அரசு வேளாண் கல்லுாரி கவுரவ பேராசிரியர்கள் கபிலன், கீர்த்திவாசன் ஆகியோர் விவசாயத்தின் நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த மொபைல் செயலிகள், ஆன்லைன் விற்பனை தளங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், தங்கதுரை மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
இதில், செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, திருக்கனுார், மணலிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

